ஆஸ்திரேலியா அணியின் பவுலிங் பிரச்சனை.. ஆனா பேட்டிங் வரிசையை பாருங்க.. டாஸ் ரொம்ப முக்கியம் ஹிட்மேன்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தின் முடிவில் டாஸ் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி டாஸை இழந்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்திலாவது டாஸ் வென்று போட்டியை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளது. இன்று மதியம் தொடங்கவுள்ள இந்த போட்டிக்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த போட்டியால் இந்திய அணி ரசிகர்கள் பலருக்கும் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியே நினைவுக்கு வந்துள்ளது.

champions trophy 2025 India vs Australia Travis Head 2025 vs

ஏனென்றால் அகமதாபாத் மைதானத்தில் கூடிய 1.3 லட்சம் ரசிகர்களையும் சைலண்ட் செய்வேன் என்று கூறி, அதனை செயல்படுத்தி காட்டினார் பேட் கம்மின்ஸ். இம்முறை அதனை ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி செய்துவிடுமோ என்று ரசிகர்கள் சிறிய பதற்றத்துடன் இருக்கின்றனர். இதனால் இந்திய அணி கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

இதனிடையே துபாய் மைதானத்தில் வெற்றிபெறுவதற்கு டாஸ் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. துபாய் மைதானத்தில் பெரும்பாலும் டாஸ் வென்று சேஸிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளது. ஐசிசி தொடர் என்பதால் இம்முறை நிச்சயமாக அதிக ரன்களை குவிக்கும் வகையில் பிட்ச் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்திய அணி கடைசியாக விளையாடிய 13 போட்டிகளிலும் டாஸில் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகச்சிறப்பாக கையாண்டு வெற்றியை அடைந்து வருகிறது. ஆனால் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி எப்போதும் சிறிய பதற்றத்துடன் அணுகும்.

இதனால் ஆஸ்திரேலியா அணியின் அனுபவம் இல்லாத பவுலிங்கை சிதறடிக்கும் நோக்கில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கம்மின்ஸ், ஹேசல்வுட் மற்றும் ஸ்டார்க் இல்லாததால் ஆடம் சாம்பாவை சுற்றியே பவுலிங் அட்டாக் கட்டமைக்கப்பட்டுள்ளது. துபாய் மைதானத்தில் விளையாட ஆஸ்திரேலியா அணிக்கு 3வது ஸ்பின்னரே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி சேஸிங் செய்வது சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. எவ்வளவு பெரிய இலக்கு நிர்ணயித்தாலும், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களை அட்டாக் செய்ய முடியும். இதனால் சேஸிங் செய்வதே இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+