ஆபத்து.. நல்லாவே இல்லை.. நம்பர் 4ல் தூக்கியடிக்கப்படும் வீரர்.. உள்ளே வரும் புதிய வீரர்.. ட்விஸ்ட்?
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா வென்ற நிலையில் அடுத்து நடக்கும் போட்டிகளில் இந்திய அணியில் முக்கியமான மாற்றம் ஒன்று செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 16 பந்துகள் பிடித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். எதிர்பார்த்தபடியே ஷார்ட் பந்தில் அவர் அவுட் ஆனார். முழுமையாக ஷார்ட்டாக் வராமல் பாதி ஷார்ட் பந்திற்கே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி உள்ளார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை எடுத்த ரன்கள் - 128 ரன்கள் மட்டுமே ஆகும்.,
இன்னிங்ஸ் - 6
சராசரி - 32
ஸ்ட்ரைக் ரேட்- 81.01 என்று மோசமாக ஆடி உள்ளார்.
விளாசல்: இந்த நிலையில்தான் இனி அணியில் கே எல் ராகுல் முன்பே இறங்க வேண்டும். அணியில் இஷான் கிஷனை எடுக்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்க கூடாது. அவரின் வீக்னஸ் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த சீசனில் இனி இந்திய ஆடும் போட்டிகள் எல்லாம் நல்ல வேகமான பிட்ச் கொண்ட போட்டிகள்.
பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் . வேகமாகவும் வரும். இதனால் இந்த பிட்சுகளில் ஷ்ரேயாஸ் ஆட கூடாது அவருக்கு பதிலாக அணிக்குள் இஷான் கிஷன் கொண்டு வரப்படலாம் என்று அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஷார்ட் பந்தை இன்னும் நன்றாக ஆடுவார் என்பதால் அவரை அணிக்குள் கொண்டு வரும் வாய்ப்புகள் உள்ளன.
கிரிக்கெட் ரசிகர்களும் பலரும்.. அவர் அவுட் ஆன விதம் பார்க்கவே நன்றாக இல்லை. அவரால் இந்திய அணிக்குத்தான் ஆபத்து என்று கமெண்ட் செய்துள்ளனர். இதனால் அடுத்த மேட்சில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன .
இந்தியா வெற்றி: நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் 2023 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து நாக் அவுட் ஆவது உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தை துவம்சம் செய்ய காரணமாக 5 விஷயங்கள் இருந்தன.
இந்த போட்டியில் தொடக்கத்திலேயே இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கில் 13 பந்துகள் பிடித்து வெறும் 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கோலி இன்னொரு பக்கம் டக் அவுட் ஆனார். பிட்ச் அந்த அளவிற்கு பேட்டிங் செய்ய கஷ்டமாக இருந்தது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகள் பிடித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். எதிர்பார்த்தபடியே ஷார்ட் பந்தில் அவர் அவுட் ஆனார். இதன் பின் அணியை சரிவில் இருந்து மீட்டு ரோஹித் சர்மா சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தார். 101 பந்துகள் பிடித்த 87 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ராகுல் 39 ரன்கள் எடுத்தார் .

கடைசி கட்டத்தில் விளாசிய சூரியகுமார் யாதவ் 47 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். இதனால் 180ல் சுருண்டிருக்க வேண்டிய இந்திய அணி 229-9 ரன்கள் எடுத்தது.
பவுலிங்: இதையடுத்து பவுலிங் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர்கள் மீது பிரஷர் போட்டது. டேவிட் மாலன் விக்கெட்டை 16 ரன்களுக்கு பும்ரா எடுத்தார். அடுத்த பந்தே ஜோ ரூட் விக்கெட்டை பும்ரா எடுத்தார். பின்னர் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஷமி டக் அவுட்டில் எடுக்க இங்கிலாந்து அணி திணறியது., அடுத்து பிரைஸ்டா விக்கெட்டை 14 ரன்களுக்கு சமி எடுத்தார்., அடுத்த 25 ரன்களுக்கு குட்டி பார்ட்னர் ஷிப் அமைத்த பட்லர் மெயின் அலி.. குல்தீப், சமி பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் குல்தீப், ஜடேஜா மீண்டும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை 98-8 ரன்களுக்கே இழந்து தள்ளாடியது. அதன்பின் தொடர்ந்து பிரஷர் போட்ட இந்திய பவுலர்கள், சமி, பும்ரா விக்கெட் எடுக்க 129 ரன்களுக்கு இங்கிலாந்து அணியை சுருட்டி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர்.
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications