பிசிசிஐக்கு பறந்த நோட்டீஸ்.. கொல்கத்தா போலீஸ் அதிரடி இந்தியா போட்டிக்கு முன்பே பரபரப்பு..
கொல்கத்தா: 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்நிலையில் தான் போட்டிக்கு முன்பாகவே கொல்கத்தா போலீசார் பிசிசிஐக்கு நோட்டீஸ் அனுப்பிய விபரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் பல்வேறு மைதானங்களில் டிக்கெட் விற்பனை செய்வதாக கூறி சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என போலி இணையதளம் மூலம் சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சிலர் தாங்கள் எடுத்த டிக்கெட்டை வலைதளங்களில் பதிவிட்டு கடைசி நேரத்தில் எங்களால் மேட்ச் பார்க்க செல்ல முடியவில்லை. இந்த டிக்கெட்டை விரும்புவோர் என்னிடம் பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம் என மோசடி செய்து வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டி தொடர்பான டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இன்றைய தினம் இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் தான் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை பந்தாடி மாபெரும் வெற்றியை பெற்றது. இதற்கிடையே தான் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டி தொடர்பாக கொல்கத்தா போலீசார் பிசிசிஐக்கு பரபரப்பான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது கொல்கத்தா மைதான் போலீஸ் சார்பில் பிசிசிஐ லைவர் ரோஜர் பின்னிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகளை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வரும் புகாருக்கு நடுவே இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பான விசாரணை நடத்தி வரும் மைதான் காவல் நிலைய விசாரணை அதிகாரிகளிடம் பிசிசிஐ உரிய ஆவணங்களையும், தகவல்களையும் வழங்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
முன்னதாக உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக கொல்கத்தா போலீசார் இதுவரை 19 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 108 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications