இந்தியாவை வீழ்த்தினால் ‛டின்னர்’.. வாய்விட்டு பல்ப் வாங்கிய பாகிஸ்தான் நடிகை! இப்போ சொன்னத பாருங்க
சென்னை: இந்தியாவை வீழ்த்தினால் டின்னர் வழங்குவதாக வங்கதேச அணிக்கு பாகிஸ்தான் நடிகை சேகர் சின்வாரி ஆபர் கொடுத்தார். ஆனால் இந்தியாவிடம் வங்கதேசம் தோற்ற நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் ஷர்மா 86 ரன்கள் குவித்து இருந்தார்.
இதன்மூலம் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை இந்தியா வென்றது. அதோடு ஒருநாள் உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற வரலாற்றை இந்தியா தக்க வைத்துள்ளது. இந்த தோல்வி என்பது பாகிஸ்தான் அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்தது. இதற்கிடையே தான் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை சேகர் சின்வாரி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது உலககோப்பை போட்டியில் இந்தியாவை வங்கதேச அணி தோற்கடித்தால் வீரர்கள் தன்னுடன் இரவு உணவு சாப்பிட வங்கதேசத்தின் டாக்காவில் ஏற்பாடு செய்வதாக பாகிஸ்தான் நடிகை சேகர் சின்வாரி அறிவித்து இருந்தார். அதாவது பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய நிலையில் இந்தியாவை வங்கதேசம் வீழ்த்த வேண்டும் என்பதற்காவும், வங்கதேச வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இது விவாதத்தை கிளப்பியது.
Well played Bengali Tigers. At least you guys challanged Indian team on their home ground.👏😊
— Sehar Shinwari (@SeharShinwari) October 19, 2023
இதற்கிடையே தான் நேற்று இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 257 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 41.3வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியா வங்கதேச அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா 48 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி அதிரடியாக ஆடி சதமடித்தார்.விராட் கோலி 103 ரன்களும், கேஎல் ராகுல் 34 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதன்மூலம் வங்கதேச அணி வீரர்களுக்கு ஆபர் வழங்கிய பாகிஸ்தான் நடிகை சேகர் சின்வாரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் தான் இந்தியா-வங்கதேசம் இடையேயான போட்டி குறித்து சேகர் சின்வாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது ஆசை நிறைவேறாத பட்சத்திலும் கூட அதனை சமாளிக்கும் வகையில் வங்கதேச அணியை பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகை சேகர் சின்வாரி வெளியிட்டுள்ள பதிவில், ‛‛பெங்காலி டைகர்ஸ் நன்றாக விளையாடி உள்ளீர்கள். இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் சவால் அளித்து உள்ளீர்கள்'' என தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு தற்போது இந்திய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை சேகர் சின்வாரியை ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது உண்மையிலேயே நீங்கள் வங்கதேச அணியை புகழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை விட சிறப்பாக விளையாடினீர்கள் என கூற வேண்டும் எனக்கூறி அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications