சேசிங்கில் தொடர்ந்து சொதப்பும் சிஎஸ்கே.. சென்னை அணி செய்யும் மேஜர் தவறுகள்
சென்னை: சென்னை அணி இன்று பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டது. சென்னை அணி தொடர்ந்து சேசிங்கில் சொதப்பி வருவதே இதற்கு காரணமாக உள்ளது. தோனி தன்னால் முடிந்த அளவு அதிரடியாக ஆட முயற்சித்தாலும் அவருக்கு முன்பாக இறங்கும் வீரர்கள் சொதப்புவது தொடர்கிறது. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. சென்னை அணி இன்றைய போட்டியில் தோல்வி அடைவதற்கான முக்கியமான காரணங்களை பார்க்கலலாம்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. நடப்பு சீசனில் சென்னை அணி மோசமான தொடக்கம் கண்டது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்ற சென்னை அதன் பிறகு வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

4 வது தோல்வி
இந்த நிலையில்தான் இன்று பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த போட்டியை சென்னை அணி எதிர்கொண்டது. சென்னை அணி பீல்டிங்கில் இந்த போட்டியிலும் சொதப்பியது. பந்து வீச்சும் மெச்சும் படியாக இல்லை. ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடக்க வீரர் ஆர்யா சென்னை பந்துவீச்சை புரட்டி எடுத்தார். இதனால், 6 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது.
இமாலய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரச்சின் ரவீந்திரா 36 ரன்களிலும் கெய்க்வாட் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். கான்வே அதிரடியாக ஆடினாலும் சென்னை அணியின் ரன் ரேட் எகிறிக் கொண்டே இருந்தது. தோனி தன்னால் முடிந்த அளவுக்கு அதிரடி காட்டினார். கடைசி ஓவரில் 28 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. 20 ஓவர் போட்டிகளில் லாஸ்ட் ஓவரில் 28 ரன்கள் அடிப்பது என்பது எல்லாம் கிட்ட்தட்ட பகல்கனவு போலத்தான்.
எனினும், தோனி களத்த்தில் இருந்ததால் சென்னை ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். பஞ்சாப் ரசிகர்கள் எதோ பயத்துடன் இருப்பது போல் இருந்தனர். ஆனால் கடைசி ஓவரில் முதல் பந்திலேயே தோனி அவுட் ஆக சென்னை அணியின் ரசிகர்களின் இதயம் நொறுங்கி போனது. பஞ்சாப் அணியினர் குஷியடைந்தனர். ஜடேஜேவும் அடித்து ஆட தடுமாறினார். இதனால், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை அணிக்கு இது 4 வது தோல்வியாகும்.
சிஎஸ்கே செய்யும் தவறுகள்
* சென்னை அணியின் இன்றைய தோல்விக்கு பந்து வீச்சு முக்கிய காரனமாகும். பஞ்சாப் அணியின் துவக்க வீரர் ஆர்யாவை கட்டுப்படுத்த சென்னை அணி தவறிவிட்டது.
* பேட்டிங்கை பொறுத்தவரை இமாலய இலக்கு என்பதால் துவக்கம் முதலே அதிரடியாக ஆட வேண்டும். ஆனால், சென்னை அணி முதலில் இருந்தே இந்த விஷயத்தில் சொதப்பி வருகிறது. சொல்லப்போனால் பிற அணிகளில் உள்ளதை போல தற்போது சென்னை அணிக்கு பின் வரிசையில் பவர் ஹிட்டர்கள் இல்லை.
* இதனால், ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும். ஆனால் சென்னை அணி இன்றும் இதை செய்ய தவறியது. மற்ற மேட்சுகளை விட இன்று பராவாயில்லை என்றாலும் இந்த ரன்கள் போதுமானதாக இல்லை. கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்க முடியும். குறிப்பாக பவர் பிளேவில் சிக்சர்களையே சிஎஸ்கே அடிக்கவில்லை.
* மற்ற டீம்களில் முதல் பந்துகளையே சிக்சர்களுக்கும் தூக்கும் அளவில் வீரர்கள் இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்க்சில் சிக்சர்களுக்காக சிவம் துபே மற்றும் தோனியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
* ரவீந்திர ஜடேஜாவும் கிடைக்கும் பந்துகளை சிக்சருக்கு விரட்ட முடியாமல் திணறுவது.
* அதிரடியாக ஆட தவறும் விஜய் சங்கர் போன்றவர்களை தொடர்ந்து அணியில் வைத்து இருக்காமல் சென்னை அணி வேறு வீரரை முயற்சிக்கலாம் என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
* தோனி தன்னால் முடிந்த அளவு அதிரடியாக ஆட முயற்சித்தாலும் அவருக்கு முன்பாக இறங்கும் வீரர்கள் சொதப்புவது தொடர்கிறது. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
5 போட்டிகளிலும் செகண்ட் பேட்டிங்
* சிஎஸ்கே இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங்தான் செய்துள்ளனர்.
* இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்சை சேஸ் செய்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
* இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
* மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது
* தொடர்ந்து 4வது போட்டியிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
* தற்போது 5 வது போட்டியிலும் சென்னை அணி இரண்டாவது பேட்டிங்க் செய்தது. இதிலும் 219 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடைசி வரை போராடி 201 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 5 போட்டிகளில் விளையாடி 4 இல் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது. எப்படியாவது இந்த மேட்ச்சில் சிஎஸ்கே வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications