For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள்

By BBC News தமிழ்
|
  • இலங்கையில் 1983-2009 இனப்போர் நடந்து முடிந்தது.
  • இந்த போர்க்காலத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
  • யுத்த காலத்து குடிமக்கள் கணக்கெடுப்பின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாக மன்னார் ஆயர் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு முறையிட்டுள்ளார்.
  • இவர்களில் எவரும் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ கண்டறியப்படவில்லை.
  • இவர்களில் பெரும்பாலோனோர் அரச படைகளால் பிடிக்கப்பட்டதாகவோ அல்லது படைகளிடம் சரணடைந்து பின்னர் காணாமல் போனதாகவோ ,அவர்களது உறவினர்களும், மனித உரிமை அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கூறுகின்றனர்.

இலங்கை : வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்பு போராட்டம்

  • தற்போது அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோருக்கான அலுவலகம் என்ற அமைப்புக்கு முன் இதே பிரச்சனை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பரணகம ஆணையம் அதன் பணி முடிவடையாத நிலையில் 2016ல் நிறுத்தப்பட்டது.
காணாமல் போனோர் பிரச்சனை : இலங்கைப் போரின் மாறாத வடு
Reuters
காணாமல் போனோர் பிரச்சனை : இலங்கைப் போரின் மாறாத வடு
  • ஐ.நா மனித உரிமைக்கவுன்சில் இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.
  • 1989ல் அரசு ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்க எடுத்த முயற்சிகள் போதும் இது போல ஆயிக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயினர்.
  • பிரபலமான சிங்கள கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட காணாமல் போன பல சிவிலியன்களில் ஒருவர்.
  • விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இராணுவத்தில் சரணடைந்த பலரும் காணாமல் போயிருக்கின்றனர்.
BBC Tamil
English summary
We have compiled ten important details about the persons missing during the war in Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X