ஈரோடு: சிலிண்டர் வெடித்து தாய், மகள்கள் பலி - கொலையா? தற்கொலையா
ஈரோடு அருகே சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டிலிருந்த தாய், மகள்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: சித்தோடு அருகே தயிர்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை பெரும் சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் வீட்டிலிருந்த தாய் ஜெயமணி,45, மகள்கள் தனுஷ்யா,18, பவித்ரா,13 ஆகிய 3 பேர் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து மூவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இப்போது சிலிண்டர் வெடிப்பு சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. படுக்கையறையில் கேஸ் சிலிண்டர் இருக்கும் நிலையில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டன.
ஜெயமணியின் கணவர் ராஜா வயலுக்கு சென்றிருந்த நேரத்தில் மகள்களுடன் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக மூவரின் உடல்களும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications