இலங்கை கடற்படையினரின் வெறித்தனம்... 6 வயது தமிழ் சிறுவன் "பலாத்காரம்" செய்து படுகொலை!
திருகோணமலை: இலங்கை கடற்படையால் 6 வயது தமிழ்ச் சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்ட சம்பூரில் சில மாதங்களுக்கு முன்னர் தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் சம்பூர் 7-வது வட்டாரத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் என்ற 6 வயது சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் சிறுவனை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப்போது சம்பூரில் இலங்கை கடற்படை முகாம் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் தர்சன் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் தர்சனின் உடலை மீட்டனர். தர்சனின் வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் கொலைகாரர்கள் போட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தர்சன் காணாமல் போன நாளன்று கடைசியாக இலங்கை கடற்படையினர்தான் அழைத்து சென்றதாக நேரில் பார்த்த சிறுவர்கள் சாட்சியமளித்துள்ளனர். தர்சனை ஓரின சேர்க்கைக்குள்ளாக்கி இலங்கை கடற்படையினர் கொலை செய்துவிட்டு கிணற்றில் போட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் மீண்டும் குடியேறியுள்ள தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications