அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுவெடிப்பு.. இலங்கையில் பரபரப்பு.. கொழும்பில் ராணுவம் குவிப்பு!
இலங்கையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டுவெடித்த காரணத்தால் தற்போது தலைநகர் கொழும்பில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொழும்பு: இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுவெடித்த காரணத்தால் தற்போது தலைநகர் கொழும்பில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இலங்கையில் நடந்த இறுதி போருக்கு பின் அந்நாட்டில் கொஞ்சம் அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று அங்கு ஆறு இடங்களில் குண்டுவெடித்து இருக்கிறது.
இன்று காலை மக்கள் தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை அடுத்து வழிபாடு நடத்திக் கொண்டு இருக்கும் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

சர்ச்
மொத்தம் 8 இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச்,மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது. அனைத்தும்கொழும்பில் உள்ள மிக முக்கியமான கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆகும். மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்ஷங்கிரி லா ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.

கொழும்பு குறி
இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது கொழும்பு என்பதுதான் மிக முக்கியமான விஷயம் ஆகும். சரியாக தலைநகரில் மிக முக்கியமான இடங்களில் இந்த குண்டுவெடித்துள்ளது. அதில் குண்டுவெடித்த 2 ஹோட்டல்கள் வெளிநாட்டு மக்கள் அதிகம் தங்கி இருந்த 5 நட்சத்திர ஹோட்டல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசம்
கொழும்பில் பத்து ஆண்டுகளுக்கு பின் நடக்கும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதல் ஆகும் இது. ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. வெடிக்கப்பட்ட குண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
|
ராணுவம் குவிப்பு
இந்த தாக்குதல் காரணமாக கொழுப்பில் தற்போது மீண்டும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பெரிய அளவில் ராணுவப்படை கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications