ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே 3-வது முறையாக கைது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: நில அபகரிப்பு மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மைத்ரிபால சிறிசேனா அதிபரான பின்னர் 3-வது முறையாக பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த ஆண்டு மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்ததால் அவரது தம்பி பசில் ராஜபக்சே அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். ஆனால் அவர் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.

Basil Rajapaksa arrested over land related case

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் வேறுவழியின்றி அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பினார் பசில் ராஜபக்சே. அவர் இலங்கை திரும்பிய உடனேயே கைது செய்யப்பட்டார். 3 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் கடந்த மாதம் நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் மீண்டும் பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் உடனே ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில் கம்பஹா என்ற இடத்தில் நில அபகரிப்பு மோசடி செய்த புகாரில் இன்று 3-வது முறையாக பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+