பசில் ராஜபக்சேவுக்கு மே 7 வரை காவல் நீட்டிப்பு...!
கொழும்பு: ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பசில் ராஜபக்சேவின் காவலை மே 7-ம் தேதி வரை நீட்டித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தம்பி, பசில் ராஜபக்சே. முந்தைய அரசில் அதிபரின் மூத்த ஆலோசகராகவும், பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சராகவும் பதவி வகித்தார், மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த இவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தனது கைதுக்கு அஞ்சி மனைவியுடன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், பசில் தனது பதவி காலத்தில், வாழ்வாதார மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தில் 5 லட்சத்து 30 ஆயிரம் டாலர் அதாவத இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 29 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, சிறிசேன அரசால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் வெளிநாட்டுக்கு ஓடியதால், இண்டர்போல் உதவியை இலங்கை அரசு நாடியது.
இதனிடையே நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, கடுவெல நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த மாதம் நாடு திரும்பிய அவரிடம் நிதி குற்றத்தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி காவலில் அடைத்தனர்.
நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து பசில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி, பசிலின் காவலை மே 7-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
அப்போது, கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்ற பசிலின் வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வெலிக்கடை சிறை மருத்துவமனைக்கு பசிலை அனுப்ப உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications