யாழில் டக்ளஸ் தேவானந்தா தூண்டுதலில் தாக்கப்பட்ட வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட 4 பேர் படுகாயம்!!
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி. இயக்கத்தின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் தூண்டுதலால் தாக்கப்பட்ட வட மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் படுகாயமடைந்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையின் கீழ் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட டக்ளஸ் தேவானந்தா கட்சியின் சிவராசா, சிவாஜிலிங்கத்துடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா உத்தரவுப்படி அவரது கட்சியின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தண்ணீர் கேன்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் அங்கு அமளி ஏற்பட்டது.

இந்தத் தாக்குதலில் வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், விந்தன் கனகரத்தினம், சி.சிவயோகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் விக்னேஸ்வரன், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் தன்னுடன் அழைத்திருந்த, சம்பந்தமில்லாத வெளியாட்களுமே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
