கொழும்பில் தனியார் நிறுவன அலுவலகத்தில் பதுக்கப்பட்ட ஆயுதக் குவியல் மீட்பு!! கோத்தபாயவுக்கு தொடர்பா?
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் தனியார் நிறுவன அலுவலகத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டப வளாகத்தில் ´ரக்னா லங்கா´ என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சட்டவிரோதமாக பெருமளவிலான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தை போலீசார் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் திறந்து சோதனையிட்டனர். அப்போது பெரும் ஆயுதக் குவியல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிகளும் தோட்டாக்களும் சட்டவிரோதமாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே, தமக்கு பிடிக்காதவர்களை படுகொலை செய்ய மரணப் படை ஒன்றை அமைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சிக்கிய ஆயுதங்களுக்கும் அவருக்கும் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications