அதிபர் பதவியை தொடர்ந்து சுதந்திரா கட்சி தலைவர் பதவியையும் ராஜபக்சேவிடமிருந்து கைப்பற்றிய சிறிசேன!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத்தொடர்ந்து, தாம் வகித்து வரும் சுதந்திரா கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே அப்பதவியை புதிய அதிபர் சிறிசேனவுக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.
இலங்கையின் அதிபராக இரண்டு முறை பொறுப்பு வகித்த ராஜபக்சே, சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, அதிபர் பதவியை இழந்த ராஜபக்சே சுதந்திரா கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்து நீடித்து வந்தார்.
தேர்தலில் தோல்வியால் ராஜபக்சேவுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. எஸ்.எல்.எப்.பி., விதிகளின்படி, அதிபராக தேர்வு செய்யப்படுபவர் தான் கட்சி தலைவர் பொறுப்பு வகிக்க வேண்டும். இப்படிப்பட்ட விதிமுறையை கொண்டு வந்ததே ராஜபக்சே தான்.

இந்த விதிமுறைப்படி சுதந்திரா கட்சியின் தலைவர் பொறுப்பை, சிறிசேனாவிடம் ஒப்படைக்க வேண்டும் என, அவரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில், இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்த ராஜபக்சே, தற்போது தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இதனிடையே, எஸ்.எல்.எப்.பி., தேசிய ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சேவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததைத்தொடர்ந்து, பசில் ராஜபக்சே அமெரிக்காவிற்கு தப்பி ஓடிவிட்டார்.
இதனிடையே நேற்றிரவு, சிறிசேன மற்றும் ராஜபக்சே தனிப்பட்ட முறையில் சந்தித்து கட்சி தலைமை பதவி குறித்து கலந்து பேசியுள்ளனர். அதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இன்று சிறிசேன, சுதந்திரா கட்சி தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications