இலங்கையில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி: இரு நாட்டு கடற்படை ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு : இந்திய கடற்படைத் துணைத் தளபதி அஜித் குமார் நான்கு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அங்கு அவருக்கு இலங்கை கடற்படை தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார், நான்கு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கை கடற்படையின் முக்கிய அதிகாரிகளை சந்தித்த அவர், கடற்படை கப்பல்களையும் பார்வையிட்டார்.

அதன் பிறகு அவர் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும், இரு நாட்டு கடற்படை ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications