மீனவர் பிரச்னைக்காக ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்த தயார்: இலங்கை அமைச்சர்

பி.பி.சி.தொலைக்காட்சிக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன அளித்த பேட்டியில், கூறியுள்ளதாவது:
"இலங்கை- இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்னை மோசமடைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அண்மைய காலங்களில் முன்னெடுத்திருந்த சில தீர்மானங்கள் தான் காரணம்.
தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்திய மீனவர்கள் உற்சாகமடைந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்றனர். இந்த ஆண்டில் மட்டும், இலங்கைக் கடற்படையின் கண்காணிப்பின்படி, 43 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அவர் தான் இந்தப் பிரச்னைக்கு கடந்த காலங்களில் அடித்தளமிட்டார். அவர் எடுத்திருந்த சில தீர்மானங்கள் காரணமாகத் தான் இந்தப் பிரச்னை மோசமடைந்திருக்கிறது.
இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க போக வேண்டாம், அது சட்டவிரோத நடவடிக்கை என்று நாங்கள் எங்கள் மீனவர்களுக்கு கூறியிருக்கிறோம். ஆனால் அப்படியான அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து வந்திருக்கவில்லை.
தமிழக முதல்வர் ஒரு பக்கத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுகிறார். ஆனால் மறுபக்கம் அவர்களின் மனித உரிமைகளை மீறுவோருக்காகவும் அவர் குரல் கொடுக்கிறார். அதனால்தான் அந்த மீனவர்கள் இலங்கை கடல்பரப்புக்குள் வருவதற்கு உற்சாகம் பெறுகின்றனர்.
தமிழக முதல்வர் அழைப்பு விடுத்தால், மீனவர் பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறேன்" என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications