ஈழத்தில் மாவீரர் நாள் கொண்டாட சிங்கள போலீஸ் தடை

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: ஈழ விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர்களை நினைவு கூறும் வகையில் நவம்பர் 27ம் தேதி அனுசரிக்கப்படும் மாவீரர் நாள் தினத்தை யாரும் அனுசரிக்கக் கூடாது என்று இலங்கையின் சிங்கள காவல்படையினர் தடை விதித்துள்ளனர்.

ஈழ மண்ணின் விடுதலைக்காக பல தமிழ் இளைஞர்கள், பெண்கள் போர் புரிந்து வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த விடுதலைப் புலிகள் மாவீரர்களாக கெளரவிக்கப்பட்டு அவர்களது உயிர்த்தியாகம், ஆண்டுதோறும் நவம்பர் 27ம் தேதி ஈழத்தில் மாவீரர் நாளாக அனுசரிக்கப்படும்.

உலகம் முழுவதிலும் தமிழர்கள் இந்த மாவீரர் நாளை அனுசரித்து வருகின்றனர். தற்போது ஈழ மண், சிங்களர்களின் வசம் போய் விட்ட நிலையில் அங்கு மாவீரர் நாளை அனுசரிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனராம்.

மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+