தமிழக மீனவர்கள் 29 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

மன்னார்: தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கையின் மன்னார் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

பாக் ஜலசந்தி கடற்பரப்பில் கடந்த 1-ந் தேதி தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கி கைது செய்தது.

மொத்தம் 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே நேற்று உத்தரவிட்டார்.

இதனை ஏற்று இலங்கை மன்னார் நீதிமன்றம் இன்று தமிழக மீனவர்களை விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+