ராஜபக்சே கட்டிய விமான நிலையத்தில் அரிசியைக் கொட்டி வைக்க உத்தரவு!
ஹம்பந்தோட்டா: ராஜபக்சே அதிபராக இருந்த சமயத்தில், ஹம்பந்தோட்டா மாவட்டம் மாத்தள என்ற இடத்தில் பெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாம். மேலும் அங்கு அரிசி மூடைகளை சேமித்து வைக்கும் கிட்டங்கியாக அதைப் பயன்படுத்தவும் சிறிசேன அரசு உத்தரவிட்டுள்ளதாம்.
மாத்தளவில் ராஜபக்சே ஆட்சிக்காலத்தின்போது சர்வதேச விமான நிலையம் ஒன்று கட்டப்பட்டது. இந்த விமான நிலையத்தின் தலைவிதி தற்போதைய அதிபர் சிறிசேன அரசால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதை அரிசி கொடவுனாக மாற்றி விட்டனராம்.

ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த விமான நிலையத்தின் சேவைகளை நிறுத்தி விட்டனர். அந்த விமான நிலையத்தை தற்போது பராமரிப்பு மையமாகவும், சரக்குகளை இருப்பு வைக்கும் கிட்டங்கியாகவும் மாற்றியுள்ளனராம்.
இந்த விமான நிலையத்தால் பெரும் செலவு ஏற்படுவதாகவும், பயணிகள் பெருமளவில் இங்கு வருவதில்லை என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த விமான நிலையத்தை ரூ. 250 மில்லியன் செலவிட்டு கட்டினார் ராஜபக்சே. ஆனால் பயணிகளோ அறவே வருவதில்லையாம். விமான நிலையத்தை மூடுவதற்கு முந்தைய மாதத்தில் அதாவது மார்ச் மாதத்தில் வெறும் 2 பயணிகள் மட்டுமே இங்கு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு பணியாற்றி வந்த விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையம் மற்றும் ரத்மலனா விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர்.
விமான நிலையம் அமைந்துள்ள இடம் ராஜபக்சேவின் சொந்த மாவட்டத்திற்குள் வருகிறது. எனவேதான் இந்த இடத்தில் கொண்டு வந்து விமான நிலையத்தைக் கட்டினார் ராஜபக்சே. ஆனால் பயணிகள்தான் யாரும் வரவில்லை. மேலும் இது காட்டுப் பகுதியாகும். விலங்குகள் நடமாட்டம் அதிகம். பறவைகளும் அதிகம். எனவே விமானங்களுக்கும் அபாயம் இருந்து வந்தது. இருந்தாலும் வம்படியாக இதை செயல்படுத்தி வந்தனர். இதையடுத்து தற்போது சிறிசேன அரசு இதற்கு மூடு விழா கண்டுள்ளது.
தற்போது இந்த விமான நிலையத்தை கிட்டங்கியாக மாற்றியுள்ளனர். அங்கு அரிசி மூடைகளை கொண்டு வைத்து இருப்பு வைத்து வருகின்றனராம். சிறிசேன அரசின் இந்த செயலால் ராஜபக்சே ஆதரவாளர்கள் கடுப்பாகியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications