ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியாவின் ஆதரவு தேவை: மோடிக்கு வடக்கு மாகாண உறுப்பினர் கடிதம்
கொழும்பு: இலங்கை போர்குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம், மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: வரலாற்று சிறப்புமிக்க, தங்களின், இலங்கை பயணத்தை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆஸ்லோ ஒப்பந்தபடி, இலங்கையில், நிரந்தரமான அமைதி தீர்வு காண இந்தியாவின் தலையீடு அவசியம். இது தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் ஐ.நா.வை வலியுறுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும். தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்குமாறு இலங்கையை வலியுறுத்த வேண்டும். சிறைகளில் உள்ள தமிழர்கள் காணாமல் போனவர்களின் விவரங்களை வெளியிடச் செய்ய வேண்டும்.
இலங்கை தமிழர்களின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக மருத்துவர்கள், ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது, தலைமன்னார், ராமேஸ்வரம் இடையே கப்பல் போக்குவரத்து தமிழ்நாட்டிற்கும் பலாலி, திரிகோணமலைக்கு விமான போக்குவரத்து போன்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications