நரேந்திர மோடி இன்னொரு மகிந்த ராஜபக்சே: சொல்வது பசில் ராஜபக்சே
கொழும்பு: இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி, ஆசியாவின் இன்னொரு மகிந்த ராஜபக்சே என்று கருத்து தெரிவித்துள்ளார் மகிந்தவின் சகோதரரான பசில் ராஜபக்சே.
நரேந்திர மோடியின் வெற்றி குறித்து பசில் ராஜபக்சே கூறீயுள்ளதாவது:
ஆசியாவில் இன்னொரு ராஜபக்சேவாக மோடி உருவாகி உள்ளார். இருவருக்கும் இடையே ஒத்த சிந்தனை இருக்கிறது. குஜராத்தில் மோடி எத்தகைய வாக்குறுதிகளைக் கொடுத்து நிறைவேற்றினார். அதையேதான் மகிந்த ராஜபக்சேவும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகள் அளித்து நிறைவேற்றினார்.

இவ்வாறு அவர் கூறீயுள்ளார்.
இதனிடையே நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள்தான் என்று இலங்கையின் அரசியல் விமர்சகரான தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த பேட்டி:
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைக்கப்போகும் நரேந்திர மோடியும் 'ஒரே கொள்கைத் தறியில் நெய்யப்பட்ட துணித் துண்டுகளே.
நரேந்திர மோடியே வெற்றிபெறுவார் என்பதை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஏற்கனவே நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார். அதுவும் தமிழ்நாட்டு கட்சிகளை நம்பாமல் நிச்சயம் மோடி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
இலங்கையை ஆளும் ராஜபக்சேவின் கட்சிக்கும் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் இடையே பெரிய அளவில் நடைமுறை சித்தாந்தங்களில் வேறுபாடுகள் இருக்காது.
ஒத்த எண்ணம் கொண்ட, தேசியவாத, வெகுஜன மக்களை வசப்படுத்தும் கொள்கை கொண்ட ஒருவர் முக்கிய அண்டை நாடான இந்தியாவின் பிரதமராவதை மகிந்த ராஜபக்சே வரவேற்கவே செய்வார்.
இனி ராஜபக்சே என்ன செய்யப் போகிறார்? பவுத்த மதத்தை இலங்கைக்கு அனுப்பிய அசோகச் சக்கரவர்த்தியின் மென்மையான சக்தியை இணங்கி உள்வாங்கிக் கொண்ட இலங்கை மன்னன் தேவநம்பிய திஸ்ஸனை போல இணக்கமாக இருப்பாரா? அல்லது பாஜகவினர் நம்புகின்ற இராமாயணம் கூறுகின்ற இராவணனைப் போல இருப்பாரா ? என்பதையும் ராஜபக்சேதான் தீர்மானிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் விவகாரம் மற்றும் பாகிஸ்தானுடனான இலங்கையின் பாதுகாப்பு உறவுகள் குறித்து இந்தியாவுக்கு இருக்கின்ற கலக்கங்கள் பற்றி ராஜபக்சே தயக்கம் காட்டினால், அதற்கான விலையை அவரே கொடுக்க நேரிடும்.
'மோடியின் பாஜக ஆட்சி, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தைப் போலவோ வாஜ்பாய் தலைமையிலான பழைய பாஜக அரசாங்கத்தைப் போலவோ பொறுமையைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications