இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது! அதிபர் திசாநாயக்கவுக்கு பெரும்பான்மை கிடைக்குமா
கொழும்பு: இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். தொடர்ந்து மாலை 4 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபரானார்.

நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாததால், பதவியேற்ற மறுநாளே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து, நவம்பர் 14 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
அதன்படி இன்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. அதாவது இலங்கையின் 17 வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இன்று நடந்தது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்தனர் . மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
இத்தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. இலங்கையில் 225 எம்பிக்களைத் தேர்வு செய்ய 8,888 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். 21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து அதிபரின் தேசிய மக்கள் சக்தி களமிறங்குகிறது. ராஜபக்சேக்களின் இலங்கை பொதுஜன பெரமுன, சஜித் பிரமேதேசவின் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இலங்கையில் அதிபர் திசநாயக்கே கட்சிக்கு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இதனால், எந்த மசோதாவையும் நிறைவேற்ற முடியாத நிலை இருக்கும் என்பதால் கலைத்து புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனவே இன்று நடைபெறும் தேர்தல் அதிபருக்கு பெரும்பான்மை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications