யாழில் பிரதமர் மோடி: தமிழர்கள் போராட்டம்... தலைமன்னாரில் புதிய ரயில் சேவை தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று யாழ்ப்பாணம் சென்ற போது காணாமல் போன தமிழர்களின் உறவினர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினர்.

இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர இன்று யாழ்ப்பாணம் சென்றார். அங்கு சிங்களப் பேரினவாதிகளால் தீக்கிரையாகப்பட்டு சீரமைக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தை அவர் பார்வையிட்டார்.

PM Narendra Modi flags off Talaimannar-Mannar train service

பின்னர் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடியின் இப்பயணத்தின் போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் காணாமல் போன உறவினர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். யாழ்ப்பாணத்தில் பிரதமர் மோடி செல்லும் பாதையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

யாழ் நகரில் காணாமல் போனவர்களது உறவினர்கள், மீனவர்கள், கிராமிய உழைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக தலைமன்னாரில் இந்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றப்பட்ட மதவாச்சி- தலைமன்னாருக்கான ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

PM Narendra Modi flags off Talaimannar-Mannar train service

இந்த நிகழ்ச்சியின்போது வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீனவர் பிரச்சினைகள், அரசியல் தீர்வு குறித்த ஆகியவற்றை பிரதமர் மோடிக்கு மனு ஒன்றும் கொடுக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தலைமன்னார், இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+