பிரபாகரனின் மேலும் ஒரு வீடு இடிந்த நிலையில் கண்டுபிடிப்பு!
கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க மூத்த போராளிகள் அனைவரும் ஒருசேர நின்று இறுதியாக தாக்குதல் நடத்திய ஆனந்தபுரம் என்ற இடத்தில்தான் இந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ந் தேதி சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அப்போது புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கி இருந்த பதுங்கு குழியை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். பூமிக்கு அடியில் பாதுகாப்புடன் கோட்டை போல் அமைக்கப்பட்டு இருந்த அந்த பதுங்கு குழியை ஏராளமான பேர் சென்று பார்த்து வந்தனர். இதனால் அது சுற்றுலா தலமாகியது. பின்னர் அந்த பதுங்கு குழியை இலங்கை ராணுவத்தினர் குண்டு வைத்து நிர்மூலமாக்கினர். தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மேலும் ஒரு வீட்டினைப் இலங்கை ராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனந்தபுரம் பதுங்கு குழி
முல்லைத்தீவு ஆனந்தபுரம் என்ற இடத்தில் பிரபாகரனின் மற்றொரு வீடு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்ப்டுகிறது. ஆனால் இறுதிப் போரில் புலிகளே இந்த வீட்டையும், பதுங்கு குழியையும் தகர்த்து உள்ளனர். இதனால் வீட்டின் உள்ளே இருப்பதை கண்டறியவில்லை என இலங்கை ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் ராணுவத்தினர் இடிந்த கடிடத்தை துளையிட்டு பார்த்துள்ளனர். வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது என கூறப்படுகிறது.
இப் பதுங்கு குழி சுமார் 300 மீட்டர் முதல் 400 மீட்டர் வரை உள்ளது. நிலத்திற்குக் கீழ் இது அமைக்கப்பட்டு உள்ளது. மேலுள்ள வீடு செங்கலால் கட்டபட்டுள்ளது. இந்தப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த வீட்டை தற்போது சென்று பார்க்க முடிகிறது.
ஆனந்தபுரம் யுத்தம்
இந்த ஆனந்தபுரத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் அத்தனை பேரும் இறுதிப் போரில் ஒரு சேர களமிறங்கினர். இந்த ஆனந்தபுரம் சமர்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இறுதிப் போர்.
ஆனந்தபுரம் போரில்தான் இலங்கை அரசு தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை திடீரென பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை கூண்டோடு படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications