ராஜபக்சேவின் சிரித்த முகத்துடன் கூடிய படம் பொறித்த 70,000 கடிகாரங்கள் சிக்கின!
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் உருவப் படம் இடம் பெற்ற 2500 கடிகாரங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அவரது சொந்த ஊரான வீரகெட்டிய, இங்குருமூலன பகுதியில் இருந்து திங்கள்கிழமை இவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 17ம் தேதி இதேபோன்ற 68,000 கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அனைத்துக் கடிகாரங்களையும் சீனாவிலிருந்து கொண்டு வந்துள்ளனர். தேரத்லின்போது இவற்றை வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்ததாக தெரிகிறது.

இவற்றை முறைப்படி சுங்க வரி கட்டி கொண்டு வந்தார்களா அல்லது சட்டவிரோதமாக கொண்டு வந்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ராஜபக்சே குடும்பத்தினர் மீது சரமாரியான புகார்கள் கிளம்பி வரும் நிலையில் இந்த கடிகாரங்களை வைத்தும் வழக்கு பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜபக்சேவுக்கு நேரமே சரியில்லை போலும்!












Click it and Unblock the Notifications