அரசியல் பழி வாங்குவதை நிறுத்துங்கள்- மைத்ரிபால சிறிசேன அரசிடம் மகிந்த ராஜபக்சே கெஞ்சல்
கொழும்பு: தமது குடும்பத்தினர் மீதான அரசியல் பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். இதன் பின்னர் அவரது ஆட்சிக் காலத்தில் ராஜபக்சே குடும்பத்தினர் எப்படியெல்லாம் உச்சகட்ட சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர் ; ஊழலில் திளைத்தனர் என்பதை ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஹம்பந்தோட்டை அருகே ராஜபக்சேவின் பண்ணை வீட்டில் சொகுசு பந்தய கார்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சேயின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ரக்ன லங்கா என்னும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தியதில் ஆயுதக் குவியல்கள் மீட்கப்பட்டன.
இதேபோல் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 700 கோடி ரூபாய் முறைகேடாக பல்வேறு வங்கிக்கணக்குகளில் போடப்பட்டு இருப்பதாகவும் குற்றமும் சாட்டப்பட்டு உள்ளது.
இப்படி அடுத்தடுத்து ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில் கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்சே, எங்களுடைய குடும்பம் 1931-ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. எனினும், எப்போதும் போலீஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது கிடையாது.
ஆனால், இப்போது தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசியல் பழிவாங்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கெஞ்சியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications