இந்தியா, சீனாவுடன் சுமூக நல்லுறவு தொடரும்; அனைத்து கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சி: ரணில் நம்பிக்கை!
கொழும்பு: இந்தியா மற்றும் சீனாவுடன் இலங்கையின் நல்லுறவு தொடரும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நல்லாட்சி அமைக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அதிக இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. ரணில் விக்கிரமசிங்கே இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது:
மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரையும் இணைத்துக் கொள்வோம். இந்த நடவடிக்கையில் இருந்து நாம் விலகப் போவதில்லை.
நான் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின் நானும் ஜனாதிபதியும் இணைந்து கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை ஏற்படுத்துவோம்.
நல்லாட்சியை அங்கீகரித்து அதன் பின்னர் உடன்பாட்டு அரசியலை முன்னெடுப்போம். இதில் நாம் ஒன்றிணைவோம். எவரும் இதிலிருந்து விலகிவிட முடியாது.
நாம் சுதந்திரமும் நீதியுமான தேர்தலை எதிர்கொண்டோம். எதிர்காலத்தில் நாம் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நல்லாட்சியை பலப்படுத்துவோம். அதற்குப் பின்னர் நாம் கட்சி அரசியல் பற்றி சிந்திக்க முடியும்.
இந்தியா, சீனாவுடனான இலங்கையின் நல்லுறவு தொடரும். நாட்டுக்கு நன்மை பயக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications