கொழும்பில் சல்மான் குர்ஷித் - நாளை ராஜபக்சேவுடன் சந்திப்பு
கொழும்பு: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் 2 நாள் பயணமாக இன்று இலங்கை சென்றார். கொழும்பு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பேசவிருக்கிறார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் 2 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் கிளம்பினார். கொழும்பில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய குர்ஷிதை இலங்கை சமூக சேவைகள் அமைச்சர் பெலிக்ஸ் பெரேரா மற்றும் இந்திய தூதரக அதிகாரி ஒய்.கே. சின்ஹா ஆகியோர் வரவேற்றனர்.
வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு குர்ஷித் முதன் முறையாக இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ், ராணுவ அமைச்சர் பாசில் ராஜபக்சே உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அதிக அளவில் தாக்கப்படும் விவகாரம் தான் பேச்சுவார்த்தையில் முக்கியமாக இடம்பெறவிருக்கிறது. இது தவிர 13வது சட்டதிருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும் குர்ஷித் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
குர்ஷித் நாளை வடக்கு மாகாணத்திற்கு சென்று இன்று முதல்வராக பதவியேற்ற விக்னேஷ்வரனை சந்தித்து பேசுகிறார். மேலும் வடக்கு மாகாண பகுதியில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிடுகிறார்.
அடுத்த மாதம் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அவர் இது குறித்தும் இலங்கை தரப்புடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications