இலங்கை நாடாளுமன்றத்துக்கு நாளை தேர்தல்.. பிரதமராகி விடத் துடிக்கும் ராஜபக்சே...!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்திற்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் கட்சியிலிருந்து பிரதமர் பதவிக்கு வரப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கையை சர்வாதிகாரமாக ஆண்டு கொண்டிருந்த ராஜபக்சே கடந்த ஜனவரி 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தோல்வியுற்ற விரட்டப்பட்டார். மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார்.
அத்தோடு ராஜபக்சேவின் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நாளை நாடாளுமன்றத் தேர்தலை இலங்கை சந்திக்கிறது. இதன் மூலமாக மீண்டும் ராஜபக்சே லைம்லைட்டுக்கு வர முயற்சிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

225 இடங்கள்
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 113 இடங்களைப் பெறும் கட்சி ஆட்சியமைக்கும். கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்கும்.

2 கட்சிகளுக்கு இடையே போட்டி
இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியான மைத்ரிபால தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சிக்கும், ரனில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே போட்டி உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு
இவர்கள் தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்துப் போட்டியில் உள்ளன. தமிழர் பகுதிளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலுவாக உள்ளது.

2 கட்டமாக தேர்தல் முடிவு
தேர்தல் முடிவுகள் 2 கட்டங்களாக வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மாலை தேர்தல் முடிந்தவுடன் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதையடுத்து தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். முதலாவதாக தபால் வாக்குகள் முடிவு இரவு 11 மணிமுதல் நள்ளிரவுக்குள் வெளியிடப்பட உள்ளன. தொகுதிவாரியான முடிவுகள் 18ம் தேதி அதிகாலை முதல் வெளியிடப்படுகின்றன.

ராஜபக்சே ஜெயிப்பாரா
ராஜபக்சே குருநாகலா தொகுதியில் போட்டியிடுகிறார். இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த இவர் தன் மீதும், குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச் சாட்டில் இருந்து தப்பிக்க எப்படியாவது பிரதமர் ஆகிவிட வேண்டும் என்ற கனவில் உள்ளார்.

அதெல்லாம் பிரதமர் பதவி கிடைக்காது
ஆனால் ராஜபக்சே வெற்றி பெற்றாலும் கூட அவர் பிரதமர் பதவியில் அமர்த்த மாட்டேன் என அதிபர் சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனால் ராஜபக்சே கடுப்புடன் உள்ளார். இருந்தாலும் தன்னையே பிரதமராக்க வேண்டும் என்று அவர் மைத்ரிபாலவிடம் கெஞ்சி வருகிறார்.

ரனில் விட மாட்டார்
ஆனால் தற்போது பிரதமராக உள்ள ரனில் விக்கிரமசிங்கே தனது நிலையை விட்டுத் தர மாட்டார் என்பது உறுதி. அவருக்கு மைத்ரிபாலவும் ஆதரவாக இருப்பதாகவே தெரிகிறது.

பலத்த பாதுகாப்பு
மைத்ரிபால அதிபரான பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் மிக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications