For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாக்குதல் வழக்கில் தேடப்பட்ட ராஜபக்சே ஆதரவாளர் செந்தில் தொண்டமான் சரண்!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: தபால் ஊழியர் தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளரான ஊவா மாகாண அமைச்சரான செந்தில் தொண்டமான் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் மாகாணங்களில் ஒன்று ஊவா. இந்த மாகாண அமைச்சராக இருப்பவர் செந்தில் தொண்டமான்.

SL Police continue hunt Senthil Thondaman

இவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர். தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் இலங்கையில் இருந்தபடியே ராஜபக்சே ஆதரவாளராக கலந்து கொண்டவரும் கூட.

செந்தில் மீது தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட உடனேயே செந்தில் தொண்டமான் தலைமறைவாகிவிட்டார்.

SL Police continue hunt Senthil Thondaman

செந்திலை இலங்கை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் இந்தியா உட்பட வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடாமல் விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பண்டாரவெலா மாஜிஸ்திரேட் கோர்ட்டி்ல காலையில் சரணடைந்தார் செந்தில் தொண்டமான்.

English summary
Srilanka Police said they will continue to hunt Uvaa Minister Senthil Thondaman who involved in election violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X