யாழ்ப்பாணம் அருகே 10 தலை சூரனுடன்விமரிசையாக நடந்த சூரசம்ஹாரம்!

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் அருகே உள்ள இணுவில் என்ற கிராமத்தில் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இணுவில் கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர்.

ஸ்ரீபரராஜசேகரப் பிள்ளையர் கோவில்

ஸ்ரீபரராஜசேகரப் பிள்ளையர் கோவில்

யாழ்ப்பாணம் மாவட்டம் இணுவில் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலில் இந்த சூரசம்ஹார பெரு விழா நடைபெற்றது.

21 நாள் விழா

21 நாள் விழா

இந்த சூரசம்ஹார விழா மொத்தம் 21 நாட்கள் நடைபெற்றது.

பெருங்கதையின் இறுதி நாளில் சூரசம்ஹாரம்

பெருங்கதையின் இறுதி நாளில் சூரசம்ஹாரம்

21 நாட்கள் நீடித்த பிள்ளையார் பெருங்கதையின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த சூர சம்ஹார நிகழ்வு நடைபெற்றது.

சுவாமி வலம்

சுவாமி வலம்

வசந்த மண்டபப் பூசையினைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம் வந்து வெளி வீதியில் பிற்பகல் 4 மணிக்கு தொடங்கிய சூர சம்ஹார நிகழ்வு இரவு 7 மணி வரை நீடித்தது.

10 தலை சூரன்

10 தலை சூரன்

இம்முறை விழாவில் 10 தலை கொண்ட சூரன் தலையும் புதிதாக இணைத்திருந்தனர்.

மாறி மாறி தூக்கிச் செல்லப்பட்ட சூரன்

மாறி மாறி தூக்கிச் செல்லப்பட்ட சூரன்

இளைய வயது பக்தர்கள் பலவித முறைகளில் சூரனை தூக்கிச் சென்றிருந்தனர். இதிலும் குறிப்பாக ஒருவரின் தோளில் மீது ஒருவர் ஏறி இருக்க சூரனை தூக்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மன்னன் பெயரில் கோவில்

மன்னன் பெயரில் கோவில்

இந்தப் பிள்ளையார் கோவிலை, யாழ்ப்பாணத்தினை ஆண்ட ஸ்ரீ பரராஜசேகர மன்னன் கட்டியதாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.

சூரசம்ஹார விழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் விழாவைக் கண்டு மகிழ்ந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+