ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்- இலங்கை அதிர்ச்சி
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியதால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது 2006ஆம் ஆண்டு 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து 2011ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. இதன் மூலம் 28 நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் சுதந்திரமாக செயல்பட முடியும்.
இந்த தீர்ப்பு இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து கவலை தருகிறது. இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications