10 ஆண்டு அமைதிக்கு பின் குண்டுவெடிப்பு.. இலங்கையில் இறுதி போருக்கு பின் மிகப்பெரிய தாக்குதல்!
இலங்கையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டுவெடித்த காரணத்தால் தற்போது அங்கு பெரிய அளவில் பதற்றம் நிலவி வருகிறது.
Recommended Video
கொழும்பு: இலங்கையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டுவெடித்த காரணத்தால் தற்போது அங்கு பெரிய அளவில் பதற்றம் நிலவி வருகிறது. இலங்கையில் கடந்த 10 வருடங்களில் நடந்ததில் மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.
இலங்கைக்கு இன்று கருப்பு ஞாயிறு என்றுதான் சொல்ல வேண்டும். ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட சென்ற மக்கள் பெரிய குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி இருக்கிறார்கள்.
இலங்கையில் இன்று காலை மொத்தம் 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
|
எப்படி
முதலில் இரண்டு சர்ச்களில் கொழும்பில் இந்த தாக்குதல் நடந்தது. அதன்பின் வரிசையாக இரண்டு நட்சத்திர ஹோட்டல்களில் வெடிகுண்டு வெடித்தது. தாக்குதல் நடந்த 6 இடங்களும் மிக மிக அருகில் இருக்கும் இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 6 இடங்களும் கொழும்பில்தான் அமைந்து இருக்கிறது.
|
எங்கு எல்லாம்
கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச்,மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது.மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.

10 வருடமா
இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இலங்கையில் நடந்த இறுதி போருக்கு பின் அந்நாட்டில் கொஞ்சம் அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று அங்கு ஆறு இடங்களில் குண்டுவெடித்து இருக்கிறது. அந்த இறுதி போருக்கு பின் இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுதான்.
|
என்ன இருந்தது
வெடிக்கப்பட்ட குண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இது எப்படி கொண்டு வரப்பட்டது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications