”பொங்கல்” பண்டிகைக்காக தமிழக மீனவர்கள் 104 பேர் விடுதலை- இலங்கை அமைச்சர் தகவல்
கொழும்பு: இலங்கை சிறைகளில் உள்ள 104 தமிழக மீனவர்கள் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டனர். இவர்களையும் சேர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 104 மீனவர்கள் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்ய வலியுறுத்தல்:
இந்த 104 தமிழக மீனவர்களையும், அவர்களது 66 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், இலங்கையை தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு:
இந்த நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு தமிழக மீனவர்கள் 104 பேரையும் இலங்கை விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மகின்த அமரவீரா இதை உறுதிபடுத்தும் விதமாக ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.
திருப்பி அனுப்புவோம்:
அதில் அவர், ‘‘தமிழக மீனவர்கள் 104 பேரையும் சிறைகளில் அடைத்து வைத்திருக்க இலங்கைக்கு விருப்பம் இல்லை. தமிழர் திருநாளான தைப்பொங்கலுக்கு முன்பு அவர்களை திருப்பி அனுப்ப விரும்புகிறோம்'' என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கு ஆர்வமில்லை:
மகின்த அமரவீரா தலைமையிலான மீன் வளத்துறை, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் இதில் ஆர்வம் காட்டவில்லை.
படகுகள் கேள்விக்குறியே:
அவர்கள் தமிழர்களை விடுவிப்பது பற்றி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றாலும் இந்தியா கொடுக்கும் அழுத்தம் காரணமாக இதில் ஒரு முடிவு எடுக்க இலங்கை முன் வந்துள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் 104 தமிழக மீனவர்கள் விடுதலை ஆவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்களது 66 படகுகளை இலங்கை அரசு ஒப்படைக்குமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications