For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போர்க்குற்றம் குறித்த ஐ.நா. மனிதஉரிமை தீர்மானத்தை சந்திக்க தயார்: இலங்கை

Google Oneindia Tamil News

Sri Lanka ready to face UN rights body: Minister
கொழும்பு: போர்க்குற்றம் குறித்த ஐ.நாவின் மனித உரிமை தீர்மானத்தை சந்திக்க தயாராக உள்ளதாக இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவி மக்கள் உள்பட ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். தற்போதும் இலங்கையில் ஆங்காங்கே மனித எலும்புக் கூடுகள் குவியலாகக் கண்டெடுக்கப் பட்டு வருகிறது. அவையாவும் போர்க்காலத்தில் கொல்லப் பட்ட அப்பாவி மக்கள் என சந்தேகிக்கப் படுகிறது.

இந்த போர்க்குற்றத்தை கண்டித்து ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்தில் ஏற்கனவே 2 முறை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் வருகிற மார்ச் மாதம் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அந்நாட்டு அமைச்சர் மகிந்தா சமரசிங்கே பேசியதாவது, ‘மார்ச் மாதம் மிகப்பெரிய சவாலை நாம் சந்திக்க இருக்கிறோம். எந்த சவாலையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

விடுதலைப்புலிகள் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும். தீவிரவாதத்தை ஒடுக்க ராணுவம் நடவடிக்கை எடுத்தது. போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பதில் உண்மை இல்லை‘ என்று தெரிவித்துள்ளார்.

English summary
Sri Lanka, on Saturday said it was ready to face another resolution against the country in the UN rights body over alleged war crimes during decades long civil war against the rebel Tamil Tigers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X