இலங்கை போலீசார் 600 பேரை விடுதலை புலிகள் கொன்றனரா? விசாரணைக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Sri Lankan panel asked to probe 1990 LTTE massacre of policemen
கொழும்பு: இலங்கை போலீசார் 600 பேரை கொன்றதாக விடுதலை புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டையும் விசாரிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கத்தினர் அந்நாட்டு ஜனாதிபதி கமிஷனிடம் மனு அளித்துள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு போரின்போது ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தமிழர்கள், அவர்களை கண்டுபிடித்து திரும்ப ஒப்படைக்கும்படி மக்கள் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்,.

சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து இதற்காக ஒரு கமிஷனை அந்த நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே அமைத்துள்ளார். கமிஷன் தலைவராக மேக்ஸ்வெல் பரனகமா நியமிக்கப்பட்டுள்ளார். 2009-ல் நிகழ்ந்த இறுதி கட்ட போரின்போது காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக இதுவரை 20ஆயிரம் புகார்கள் இந்த கமிஷனுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் திடீரென இலங்கை முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கத்தினர் இந்த கமிஷனை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர். அதில், "விடுதலை புலிகளுடனான போரின்போது, 1990ம் ஆண்டு, அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த போலீசார் 600 பேர் சுற்றிவளைக்கப்பட்டனர்.

அவர்களை புலிகளிடம் சரணடையுமாறு அப்போதைய அதிபர் பிரேமதாசா கேட்டுக்கொண்டார். 600 போலீசாரும் விடுதலை புலிகளிடம் சரணடைந்தனர். இந்நிலையில் அவ்வாண்டு ஜூன் 11ம்தேதி சரணடைந்த 600 போலீசாரையும் விடுதலை புலிகள் கொன்றனர்.

இதுகுறித்தும் இக்கமிஷன் விசாரணையை நடத்த வேண்டும்" என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது கிழக்கு மாகாண விடுதலைப் புலிகள் பொறுப்பாளராக இருந்தவர் இப்போது ராஜபக்சேவுடன் இருக்கும் கருணாதான்.

ஆனால் கருணாவோ, விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உத்தரவின்பேரில் பொட்டு அம்மான் இக்கொலைகளை செய்ததாக கருணா குற்றம் சாட்டியிருந்த நிலையில், இப்புகார் முக்கியத்தும் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+