Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைவிரித்த மத்திய பாஜக அரசு- கடும் எதிர்ப்பை மீறி தமிழக மீனவர்களின் 139 படகுகளை ஏலம் விட்டது இலங்கை!

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழக மீனவர்களின் 139 படகுகளை ரூ59,50,000க்கு ஏலம் விட்டிருக்கிறது இலங்கை அரசு.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி கைது செய்வதுடன் அவர்களது படகுகளையும் சிங்கள கடற்படை பறிமுதல் செய்தது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட 150க்கும் மேற்பட்ட படகுகள் கடந்த 7 ஆண்டுகளாக இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன..

ஏலத்தை தடுக்க கோரிக்கை

ஏலத்தை தடுக்க கோரிக்கை

இந்த படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் தமிழகத்தின் கோரிக்கை குறித்து இலங்கை அரசுடன் பேசி எந்த ஒரு சாதகமான முடிவையும் மத்திய அரசு பெற்றுத்தரவில்லை. இலங்கை கடும் நிதிநெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில் பெருமளவு கடனுதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தியாவது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகளை மீட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.

சீனா ஆதரவு டக்ளஸ்

சீனா ஆதரவு டக்ளஸ்

தமிழக மீனவர்களுக்கும் இந்தியாவுக்கும் எதிராக செயல்படும் சீனா ஆதரவாளரான இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவோம் என கொக்கரித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்சனையில் உடனே தலையிட்டு மீன்பிடி படகுகளை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

டெல்லியில் பீரிஸ்

டெல்லியில் பீரிஸ்

இத்தனைக்கும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்; அவரிடம் நேரடியாக பேசி ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசு கைவிரித்தது. இதனால் இலங்கை அரசு நேற்று முதல் ஏலம் விடும் நடவடிக்கைகளை துணிச்சலாக தொடங்கிவிட்டது.

ஏலம் விடப்பட்டன

ஏலம் விடப்பட்டன

யாழ்ப்பாணம் காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 139 படகுகள் நேற்று ஏலம் விடப்பட்டன. மொத்தம் ரூ59,50,000க்கு இந்த படகுகள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு படகு மட்டும் ரூ13,50,000க்கு விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், புத்தளம், நீர்க்கொழும்பு, கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வர்த்தகர்கள் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை ஏலத்தில் எடுத்துள்ளனர். தங்களது வாழ்வாதரமான மீன்பிடி படகுகள் ஏலத்தில் பறிக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+