இலங்கை: ஈழத் தமிழர் பகுதிகளிலும் ஓங்கும் சீனாவின் கை- இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல்!
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கில் ஈழத் தமிழர்கள் தாய்நிலப் பகுதியிலும் சீனா நிறுவனங்களுக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே அடுத்தடுத்து அனுமதி அளித்து வருகிறார். இலங்கையின் வடக்கு நிலப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தன. ஆனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது, இலங்கையில் தங்களது அனுமதி இல்லாமல் எந்த ஒரு வெளிநாட்டுக்கும் அனுமதி தரக் கூடாது என்பதாக இருந்தது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் பின்பற்றப்பட்ட இந்த கொள்கை அவரது படுகொலைக்கு பின்னர் நீர்த்து போனது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடுகள் தலைகீழாக தன்னிச்சையானதாகவே இருந்தது. இதில்தான் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படும் பெருந்துயரமான துன்பியல் நிகழ்வும் நடந்தது.

புலிகளுடனான யுத்தம்
1990களுக்குப் பின்னர் இந்தியாவின் பிடியில் இருந்து இலங்கை வெகுதொலைவில் விலகிச் சென்றது. அந்த தருணத்தில் சீனா, ஜப்பான், அமெரிக்கா என வெளிநாடுகள் மெல்ல மெல்ல இலங்கைக்குள் உள்ளே நுழைந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம், சமாதானப் பேச்சுகள் அனைத்தும் சர்வதேச நாடுகள் தங்குதடையின்றி இலங்கைக்குள் நுழையவும் வழிவகுத்தன. இதன் விளைவாக தமிழ்த் தேசிய இனத்துக்கு தனி நாடு கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ல் அழிக்கப்பட்டது.

மறுசீரமைப்பில் சர்வதேசம்
யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப் பகுதியில் மறுசீரமைப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை முன்வைத்து இலங்கையில் மீண்டும் இந்தியா, சீனா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. அப்போதுதான் சிங்களரின் தென்னிலங்கை பகுதியில் சீனாவும் தமிழரின் வடக்கு இலங்கை பகுதியில் இந்தியாவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தின. சீனாவோ இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெருமளவு கடனுதவிகளை வழங்கியது. இந்தியா, ஈழத் தமிழர் மறுவாழ்வு, வீடு கட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளித்தது.

ஓங்கியது சீனாவின் கை
காலப்போக்கில் இலங்கைக்கான சீனாவின் கடன் உதவி வரம்பற்றதாக உருவெடுத்தது. சீனாவின் பாலிசி என்பதே குறுகியகாலத்தில் திருப்பி செலுத்தக் கூடிய வகையிலான கடனுதவிகளை வாரி வழங்குதல் என்பதாக இருந்தது. ஆனால் இலங்கை அரசால் குறுகிய காலத்தில் அந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் போனது. இதனால் சீனாவுக்கு தங்களது துறைமுகம் உள்ளிட்டவைகளை தாரைவார்த்து கொடுத்து சீனாவின் சுயாட்சிப் பிரதேசங்களை உருவாக்கும் பேராபத்தில் நுழைந்தது இலங்கை. அப்படித்தான் அம்பாந்தோட்டா துறைமுகம் தாரைவார்க்கப்பட்டது. இலங்கை கொழும்பு துறைமுக நகர் என்னும் சீனாவின் சுயாட்சி பிரதேசமும் உருவானது.

இந்தியாவின் பதிலடி
இதற்கு செக் வைக்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவும் ஜப்பானும் இலங்கையுடன் இணைந்து மேம்படுத்தும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சீனாவுக்கு மிக மோசமான பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்பதால் இலங்கை தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு இந்தியாவுக்கு கிழக்கு கொள்கலன் முனையம் கிடைக்கவிடாமல் பார்த்து கொண்டது சீனா. இந்நிலையில் இலங்கையின் வடக்கே மன்னார் வளைகுடா பகுதியில் பிரமாண்ட காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை இலங்கை முன்னெடுத்தது. இது தமிழக கடற்பரப்பை ஒட்டிய எல்லையில் அமைவதால் இந்தியா இத்திட்டத்தைப் பெற பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் சீனாவோ இந்த திட்டத்தையும் இலங்கைக்கு கொடுத்தது. அதாவது இந்தியாவின் தென்கடல் எல்லையின் நுழைவாயில் சீனாவுக்கு இடம் கொடுத்தது இலங்கை.

ஈழத் தமிழர் நிலமெங்கும் சீனா
இதனை இந்தியா மிக கடுமையாக எதிர்த்தது. இந்தியாவுடன் நல்லுறவுதான் முக்கியம் எனக் கூறிக் கொண்டே ஒட்டுமொத்த இலங்கை நிலப்பகுதிகளை சீனாவுக்கு தாரைவார்த்து கொண்டே வருகிறது. அத்துடன் இல்லாமல் அடுத்தடுத்த பல திட்டங்களை ஈழத் தமிழரின் தாய்நிலப் பகுதியான இலங்கையின் வடக்கில் சீனாவுக்கு வழங்கியும் வருகிறது இலங்கை. இது இந்தியாவின் செல்வாக்கை தடுத்து நிறுத்தும் இலங்கையின் போக்காகவே கருதப்படுகிறது. இலங்கையின் இத்தகைய அணுகுமுறைக்கு இந்தியாவால் தற்போது எதிர்ப்பு மட்டுமே தெரிவிக்க முடிகிறது. இப்போக்கு நீடிப்பது என்பது இந்தியாவின் ஆபத்துக்கு மிக மோசமான பாதிப்பை பெறும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications