ஶ்ரீமாவோ, சந்திரிகாவைத் தொடர்ந்து இலங்கையின் 3-வது பெண் பிரதமரான ஹரிணி அமரசூரிய!
கொழும்பு: இலங்கையின் 3-வது பெண் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார் இலங்கையின் வரலாற்றில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, அவரது மகள் சந்திரிகா பண்டராநாயக்கவைத் தொடர்ந்து 3-வது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஹரிணி அமர சூரிய.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி தலைவரான அனுர குமார திசநாயக்க, தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2-வது இடத்தையும் ரணில் விக்கிரமசிங்கே 3-வது இடத்தையும் பெற்றனர்.

இதனையடுத்து இலங்கையின் 9-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க பதவியேற்றார். அதேநேரத்தில் இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்தார்.
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போதே, அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றால் ஹரிணி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க முன்னிலையில் ஹரிணி அமரசூரிய இன்று பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கையின் 16-வது பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றார். இலங்கையின் வரலாற்றில் 3-வது பெண் பிரதமர் என்ற பெருமையையும் ஹரிணி அமரசூரிய பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமராக பதவி வகித்த பெண்களாவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications