யாழ். பலாலியில் இருந்து விமான சேவை தொடங்குவதில் தாமதம்: இந்தியா மீது இலங்கை அமைச்சர் டக்ளஸ் பாய்ச்சல்
யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் தொடங்க தாமதமாவதற்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டி இருக்கிறார்.
இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, தமிழகத்தில் தஞ்சமடைந்து கொலை வழக்கில் சிக்கியவர். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். அந்நாட்டில் பெரும்பாலான அரசுகளில் அமைச்சராக வலம் வருபவர் டக்ளஸ் தேவான்ந்தா.

அண்மைக்காலமாக சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு எனப்படும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் இந்தியா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக சீனாவும் களமிறங்க முனைந்தது. ஆனால் இந்தியாவின் எதிர்ப்பால் வடகிழக்கில் சீனா காலூன்ற முடியவில்லை.
அதேநேரத்தில் தமிழகம்- இலங்கை மீனவர்களிடையேயான மோதலை சீனாவுக்கு ஆதாயமாக்கித் தரும் முயற்சிகளில் டக்ளஸ் இறங்கினார். இதற்காக இலங்கைக்கான சீனா தூதரை வடக்கு பகுதிக்கு அழைத்துச் சென்று பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்க வைத்து சர்ச்சையில் சிக்கினார் டக்ளஸ்.
இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளை தொடங்க முடியாமல் போனதற்கு இந்தியாதான் காரணம்; இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை உள்ளிட்டவைகள் இருப்பதால் இந்த விமான சேவை தொடங்கப்படவில்லை என்றார் டக்ளஸ் தேவானந்தா.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications