பிரபாகரன் மரணமடையவில்லை... இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்தால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லை என்று இலங்கை துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசுடனான இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் உயிரிழந்ததாக கூறி ஒரு சடலத்தை அந்நாட்டு ராணுவம் ஊடகங்களில் வெளியிட்டது. ஆனால் அது தொடர்பான சந்தேகம் 7 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

Srilanka Minister on LTTE leader Prabhakaran

இந்த நிலையில் சிங்கள வாரப்பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரபாகரன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவதை நம்பவில்லை. எத்தனையே பேருக்கு மரண சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரபாகரன் இறந்துவிட்டதாக மரண சான்றிதழ் கொடுத்தால்தான் என்னால் நம்ப முடியும் எனக் கூறியிருக்கிறார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இவர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்.

இதனிடையே இத்தகைய கருத்துகளை பொருட்படுத்த வேண்டாம் என்று இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+