கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் இலங்கை அரசு ஒப்படைக்கக் கூடாது: தமிழ் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன்
வன்னி: கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் இலங்கை அரசு குத்தகைக்கு அல்லது எதன் பெயரிலோ ஒப்படைக்கக் கூடாது என்று ஈழத் தமிழ் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி சிக்கலுக்கு தீர்வு காண இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கி உள்ளது. இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்து இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு தொடர்பாக பல விவாதங்கள் எழுந்துள்ளன. தற்போதைய நிலையில் கச்சத்தீவை இந்தியா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு திரும்ப பெறும்; அல்லது கச்சத்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமையை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது.
இதற்காகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் இலங்கை பயணம் மேற்கொண்டார் எனவும் கூறப்படுகிறது. இந்த பின்புலத்தில்தான் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கச்சத்தீவை தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி மீட்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் கச்சத்தீவை இந்தியாவிடம் மீண்டும் கொடுப்பதற்கு ஈழத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஈழத் தமிழ் மீனவர்கள் கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப தரும் பேச்சே கூடாது என கூறியிருந்தனர். தற்போது வன்னி எம்.பி. செல்வம் அடைக்கலநாதனும் கச்சத்தீவு பிரச்சனையில் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
இது தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் கூறியதாவது: பிரதமர் மோடி தமிழ் நாட்டிற்கு வந்திருந்த போது கச்சதீவு பிரச்சனை அதில் எழுப்பப்பட்டுள்ளது. கச்ச தீவை மீட்பதற்கு இது சரியான தருணம். ஆகவே அதனை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ முதலமைச்சர் ஊடாக பிரதமரிடம் முன் வைத்தது மன வருத்தம் தருகின்றது. இந்திய அரசாங்கம் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்பட்ட போது முதன் முதல் உதவி செய்த அரசாங்கமாக உள்ளது. பல உதவிகளை அவர்கள் செய்து வந்தார்கள். அதே நேரத்தில் தமிழ் நாட்டு முதலமைச்சர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றோம் என்ற கருத்தை முன் வைத்த போது எங்களுடைய தரப்பில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ் நாடு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். இந்த பொருளாதாரப் பிரச்சனை சிங்கள மக்களையும் பாதித்திருக்கிறது. இது தான் தமிழர் பண்பாடு என்ற விடயத்தை முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை பூராகவும் அவர்களுடைய உதவி வந்து கொண்டிருகிறது.

தமிழகத்தின் உதவி
அத்துடன் இந்தியாவில் ஒரு சிறுமி சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை எங்களுடைய மக்களுக்கு கொடுக்கின்ற நெகிழ்ச்சியான விடயத்தைப் பார்க்க முடிந்தது. அன்றாடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு பெரியவர் தனது பணத்தை இலங்கை மக்களுக்கு கொடுக்கின்ற நிகழ்வையும், ஒரு தேநீர் கடைக்காரர் பலரையும் கூப்பிட்டு தேநீர் அருந்த வைத்து அவர்களிடம் விரும்பிய பணத்தை தரும்படி கேட்டு அதனையும் வழங்கியிருந்தார். இவ்வாறு தமிழ் நாட்டு மக்கள் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு பாரிய நல்லெண்ணத்துடன் உதவி செய்துள்ளார்கள். அந்த உதவி எங்களால் மறக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்தை நாம் மறக்க முடியாது. தமிழ் நாட்டு அரசாங்கம் அன்று முதலே தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.

கச்சத்தீவை திருப்பித் தர முடியாது
உண்மையில் கஷ்டப்படுகின்ற நிலையில் நாங்கள் இருக்கும் போது கச்சதீவைப் பெறுவது என தமிழக முதல்வர் எண்ணியது கவலை தருகிறது. இதனால் மனவருத்தம் அடைகின்றோம். தமிழர்களுக்கு தற்போதைய தமிழக முதல்வரின் தந்தையார் கருணாநிதி நிறைய சேவைகளை செய்துள்ளார். இந்த நிலையில் கஷ்டமான நிலையப் பயன்படுத்தி கச்சதீவை இந்தியா பெற முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாது. கச்சதீவைப் பொறுத்தவரை அதில் எங்களது மீனவர்கள் பயன்பெறும் வாய்ப்பு கூட இருக்கிறது. கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. அது தமிழர்களின் தீவாக உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு- அச்சுறுத்தல் இல்லை
வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாரத பிரதமர் மோடி கூட இலங்கை தமிழர்களை காப்பாற்ற முயற்சிப்போம் என கூறிய நிலையில் தமிழக முதல்வர் கூறியதை ஏற்க முடியவில்லை. இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications