தமிழக மீனவர்கள் 46 பேரின் காவல் நீட்டிப்பு... இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 46 பேரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 46 பேரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பிப்ரவரி 12ம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 46 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்றோடு முடிவடையும் நிலையில் மீனவர்கள் இன்று ஊர்காற்றுறை மற்றும் பருத்திதுறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீனவர்களின் சிறைக்காவலை வரும் பிப்ரவரி மாதம் 12ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழக மீனவர்களின் இந்த சிறைக்காவல் நீடிப்பு உத்தரவால் கடலோர மீனவ கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications