இலங்கைச் சிறையில் இருந்து மேலும் 15 மீனவர்கள் விடுதலை!
இலங்கைச் சிறையில் உள்ள மேலும் 15 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு : இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேலும் 15 மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 92 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் தேடிச் சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினம், நாகை, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்ற மீனவர்களை விடுவிப்பதோடு படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜூலை 27ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெற்ற அப்துல் கலாம் மணி மண்டப திறப்பு விழாவின் போதும் மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் முதற்கட்டமாக 77 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனிடையே மேலும் 15 மீனவர்களையும் விடுதலை செய்வதாக இன்று இலங்கை அரசு அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அனைத்து 92 மீனவர்களும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications