Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்திரேலியாவிலும் ஒலித்த ”கோ கோட்டா” - இலங்கை மக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கான்பெரா: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை இன்று, சர்வதேச நிதியத்திடம் 3 பில்லியன் டாலர் கடன் கேட்டு பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளது.

Recommended Video

    ஆஸ்திரேலியாவிலும் ஒலித்த ”கோ கோட்டா” - இலங்கை மக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

    உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.

     தவறான பொருளாதார கொள்கை

    தவறான பொருளாதார கொள்கை

    இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.

    பணமின்றி தவிக்கும் இலங்கை

    பணமின்றி தவிக்கும் இலங்கை

    மேலும் அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்க உலக நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையையும் வழங்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 70 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. கடந்த மார்ச் மாதம் இலங்கையிடம் கையிருப்பில் உள்ள தொகை வெறும் 1.93 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இதன் மூலம் இலங்கையால் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாது.

    பல துறையினர் போராட்டம்

    பல துறையினர் போராட்டம்

    இலங்கை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசுக்கு எதிராகவும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மார்வன் அட்டபட்டு, சனந்த் ஜெயசூரியா உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதுதொடர்பாக இலங்கை முன்னாள் கேப்டன் அஜந்தா மேத்தியூஸ், சங்ககரா உள்ளிட்டோரும் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்தனர்.

    ஆஸ்திரேலியாவில் இலங்கை மக்கள் போராட்டம்

    ஆஸ்திரேலியாவில் இலங்கை மக்கள் போராட்டம்

    இலங்கையின் நிலையை கண்டு பல நாடுகளில் வசிக்கும் அந்நாட்டு மக்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். பொருளாதார சீரழிவுக்கு காரணமான கோட்டாபய ராஜபக்‌ஷே பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை மக்கள் மெல்போர்ன் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கானோர் பதாகைகளை ஏந்தியும் முழக்கமிட்டும் போராடினர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+