ஜூனியர் விகடன் நிருபர் மகா.தமிழ்பிரபாகரன் இலங்கையில் கைது

கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில், கிராஞ்சி பகுதிக்கு புதன்கிழமையன்று காலையில் நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மகா.தமிழ்பிரபாகரன் ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்த கிராமங்களுக்குச் செல்லும் வீதியின் மோசமான நிலையினை மகா.பிரபாகரன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை ராணுவத்தினர் கவனித்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் ஒரு கிராமத்திற்குச் சென்று மக்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது அங்குவந்த ராணுவத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட முழு குழுவினரையும் கைது செய்து ஜெயபுரம் போலீசில் ஒப்படைத்திருந்துள்ளனர்.
மாலை 5 மணிவரையில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினரை விசாரணை செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
ஆனால் நிருபர் மகா. தமிழ்பிரபாகரனை விடுதலை செய்யவில்லை. அவரிடம் தொடர்ந்தும் படையினரும், போலீசாரும் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட மகா.தமிழ்பிரபாகரன் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனை உறுதிப்படுத்திய இலங்கையின் போலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண, சுற்றுலா விசாவில் வந்த ஒருவர் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய இடங்களை புகைப்படம் எடுத்த காரணத்தாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டங்களை அந்த நபர் மீறினார் என்றும், நாளை மேலதிக நடவடிக்கைக்காக அவரை குடிவரவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைப்பார்கள் என்றும் ரோஹண தெரிவித்தார்.
மகா.தமிழ்பிரபாகரன் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று தெரிவிக்கவில்லை என்றும் கூறும் அஜித் ரோஹண, சுற்றுலா விசாவில் வருபவர்கள் இவ்வகையான நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் சுட்டிகாட்டினார்.
வட மாகாணத்தில் அதிமுக்கியமான பாதுகாப்பு தொடர்பான இடங்களை படம் எடுக்க வேண்டியத் தேவை ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார் அஜித் ரோஹண.
அதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள மகா.தமிழ்பிரபாகரன் தனது நண்பர் என்றும், வட மாகாண சபையின் உறுப்பினர் பசுபதி பிள்ளை, பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் உட்பட தமது குழுவினருடன் வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி, ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு தான் பயணித்தபோது, அவரும் உடன்வந்தார் என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்தப் பகுதியிலுள்ள மக்களைச் சந்திப்பதற்காகவும், அவர்களுடன் சில விஷயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் தாம் சென்றிருந்ததாக சிறீதரன் தெரிவித்தார். இராணுவ முகாம்கள் இருக்கும் பகுதிகளுக்கு தாங்கள் செல்லவில்லை என்றும் அவர் கூறினார். கைது செய்யப்பட்டுள்ள தனது நண்பர் இதற்கு முன்பும் ஒரு முறை இலங்கைக்கு வந்து சென்றுள்ளார் எனவும் சிறீதரன் தெரிவித்தார்.
இதனிடையே நிருபர் மகா.தமிழ்ப் பிரபாகரன், கொழும்பில் உள்ள தீவிரவாதக் குற்றத் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நான்கு மாடி என்று அழைக்கப்படும் அந்த தீவிரவாதக் குற்றத் தடுப்பு மையம், சித்திரவதைக்கும், சட்டவிரோதக் கொலைகளுக்கும் பெயர் பெற்றது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகா. தமிழ் பிரபாகரன் கடந்த ஆண்டும் இலங்கை சென்று இலங்கையின் நிலவரங்களை ஜூனியர் விகடன் இதழில் புலித்தடம் தேடி என்ற கட்டுரையாக எழுதியிருந்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications