தமிழ் எம்.பி. ரவிராஜ் கொலை: 9 ஆண்டுக்குப் பின் இலங்கை கடற்படை வீரர் 3 பேர் கைது!!
கொழும்பு: இலங்கை தமிழ் எம்.பி. நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை கடற்படை வீரர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பி. நடராஜா ரவிராஜ் காரில் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பதாக அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே கூறினார்.

ஆனால் இது இலங்கை அரசின் சதி வேலை என்று ரவிராஜின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அரசு எதிர்ப்பாளர்களை கடத்திச் செல்வது மற்றும் கொலை செய்வது போன்ற அட்டூழியங்களில் ராஜபக்சே அரசு ஈடுபட்டதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
இலங்கையில் சிறிசேனா புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பாக இலங்கை கடற்படையைச் சேர்ந்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications