திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு தாரைவார்க்கிறது இலங்கை: இரா. சம்பந்தன் பகீர் தகவல்
கொழும்பு: தென்னாசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்க்க இலங்கை முடிவு செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பகீர் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இரா. சம்பந்தன் நேற்று பேசியதாவது:
சீனாவிடம் இருந்து இலங்கை அரசு பெரிய அளவில் அதிக வட்டிக்கு கடன்களைப் பெறுகிறது. சீனாவோ இலங்கையில் பெரிய அளவில் தன்னுடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இந்தியாவை ஒதுக்குவதா?
இப்படி சீனாவை சார்ந்திருப்பதன் மூலம் இந்தியாவின் தலையீட்டை ஒதுக்கி வைக்கிறது இலங்கை. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகால உறவும் நெருக்கமும் உண்டு.
சுயநல சீனா
ஆனால் சீனா அப்படி இல்லை.. அது தனது குறுகிய நலன்களுக்காக மட்டுமே சிந்திக்கும்.
சீனாவுக்கு திருகோணமலை
இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் கூட திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய- இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானது
இது இந்தியா- இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானது. இலங்கையில் இதற்கு முன்னர் இப்படியான நிகழ்வுகள் நடைபெறாத நிலையில் இந்த நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
இவ்வாறு இரா. சம்பந்தன் கூறினார்.
ஏன் திருகோணமலை முக்கியம்?
திருகோணமலை துறைமுகத்தை வேறு எந்த ஒரு நாட்டின் பயன்பாட்டுக்கும் இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்திரா, ராஜிவ் காலத்தில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ராஜிவ்காந்தி காலத்தில் போடப்பட்ட இந்தியா- இலங்கை ஒப்பந்தத்திலும் இது இடம் பெற்றுள்ளது. இதனால்தான் திருகோணமலை சம்பூரில் இந்தியாவே அனல்மின் நிலையம் அமைக்கவும் முன்வந்தது.
தற்போது இந்தியாவை ஏமாற்றிவிட்டு திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை தாரை வார்க்க முற்பட்டால் இருநாடுகளிடையேயான உறவில் பெரும் விரிசல் விழும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications