இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை நீக்குகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு?
யாழ்ப்பாணம்: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை நீக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலின்போது விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் கேள்விக்குறியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் செயல்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இருந்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து ஓர் அறிக்கைகூட வெளியிடவில்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து வரும் 11-ந் தேதி நடக்கும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை வலியுறுத்தி இந்த மாத இறுதியில் மனித உரிமைகள் விசாரணைக்கான ஐ.நா. தூதரிடம் அறிக்கை அளிக்க உள்ளோம்.
இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த குழு விசாரணை நடத்த வேண்டும். அதில் வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
இவ்வாறு மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications