Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை அரசியலையே புரட்டி போட்ட பெண்.. புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய.. யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: அண்மையில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று அதிபரான நிலையில், பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இவர் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

இலங்கை அதிபராக இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், அங்கு அரசியலில் அதிரடி மாற்றம் நடந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கயுள்ள இலங்கை, தனது பாதையை இடதுசாரி இயக்கம் பக்கம் தேர்வு செய்துள்ளது. அநுர குமார திஸாநாயக்க அதிபராகி இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஹரிணி அமரசூரிய என்ற பெண் தான். இவர் தான் அநுர குமார திஸாநாயக்க அதிபாராவதற்கு மிகப்பெரிய அளவில் திட்டமிடலுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

sri lanka election 2024 sri lanka

இந்த அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டும் 21500 கி.மீ பயணம் செய்துள்ளார். சுத்தமாக அரசியல் பின்புலமே இல்லாத ஹரிணி அமரசூரிய இலங்கையின் பிரதமாராக பதவியேற்றுள்ளார். இவர் தான் இலங்கையின் மூன்றாவது பெண்பிரதமர் ஆவார்.

இதற்கு முன்னதாக சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய பெண்கள் பிரதமராக இருந்துள்ளனர். இவர்கள் இருவருமே அரசியல் பின்புலம் உள்ளவர்கள். இவர்களின் கணவர் மற்றும் தந்தை அரசியல் பின்புலம் உள்ளவர்கள். ஆனால் குடும்ப அரசியல் பின்னணி ஏதும் இன்றி ஹரிணி பிரதமராகி உள்ளார். இவர் 1970-ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்தார். கொழும்பு பிஷப் கல்லூரியில் படிப்பை முடித்தவர், பின்னர் இந்தியாவில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பின்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பின்னர் எடின்பர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றார்.

இலங்கை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த ஹரிணி அமரசூரிய, மெல்ல மெல்ல அரசியலை நோக்கி நகர்ந்து வந்தார். 2011-ஆம் ஆண்டே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு கவனத்தை ஈர்த்தார். கடந்த 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும், 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உதவிச் செயலாளராகவும், 2016-இல் அச்சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வேகமாக வளர்ந்த ஹரிணி அமரசூரிய, தீவிர அரசியலில் ஒருகட்டத்தில் இறங்கினார். கடந்த 2020 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் வென்று எம்பியாக தேர்வானார். இலங்கை நாடாளுமன்றத்தில் இவரது பேச்சுகள் அனைத்தும் பிரசித்தி பெற்றவை. கல்வி முதல் பாலினம் வரை பல்வேறு தலைப்புகளில் இவர் பேசிய உரைகள் இன்றும் இலங்கையில் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அதிபர் அநுர குமார திஸாநாயக்கவிற்கு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது இவர் தான். தேர்தல் நேரத்தில் ஹரிணி அமரசூரிய நடத்திய தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெண்கள் மாநாடு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக 21500 கி.மீ பயணத்தை மேற்கொண்ட அவர், பல நூற்றுக்கணக்கான கூட்டங்களில் பேசினார். பல்லாயிரம் மக்களை சந்தித்தார். இலங்கையில் இடதுசாரிகள் ஆட்சி அமைய அநுர குமார திஸாநாயக்க எந்த அளவிற்கு முக்கிய காரணமோ, அதில் கணிசமான பங்கு ஹரிணி அமரசூரியவிற்கும் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பரிசாவே இன்று குடும்ப அரசியல் பின்னணி இல்லாத, போராட்த்தையே வாழ்க்கையாக கொண்ட ஹரிணி அமரசூரிய இலங்கையின் அதிபராகி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+